vnandhu

vnandhu

03 January 2010

Current Affairs 2009 In Tamil

ஜனவரி

தமிழகம்

ஜன. 7: சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.
ஜன. 11: ஈரோட்டில் மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை. சோகம் தாங்காமல் குடும்பத்தினர் மூவரும் தற்கொலை.
ஜன. 12: இடைத்தேர்தல் வெற்றி: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் முடிவு ஜன.12ல், அறிவிக்கப்பட்டது. தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிட்டார். வெற்றிக்கு காரணமாக இருந்த மு.க.அழகிரிக்கு, ஜன.13ல், தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ஜன. 15: இலங்கையில் போர்நிறுத்தத் துக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னையில் உண்ணாவிரதம்.
ஜன. 16: துவரங்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் மூவர் பலி.
ஜன. 19: புதுச்சேரியில் ராஜிவ் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு.
ஜன. 21: தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் 1 கோடி பேர் பலன் பெறும் வகையில் புதிய காப்பீட்டு திட்டம். * தமிழகம் வந்த தலாய்லாமா சென்னை பல்கலைக்கழக மாணவர்களிடையே உரை. * தமிழகத்தில் நடந்த கள் இறக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது.
ஜன. 23: இலங்கையில் போர்நிறுத்தம் மேற்கொள்ள தமிழக சட்டசபையில் இறுதி தீர்மானம். * கலர் "டிவி' ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செல்வகணபதி விடுவிப்பு.
ஜன. 24: ஏர்வாடியில் மனநலம் பாதிக் கப்பட்டவர் தீவைத்ததில் 4 பேர் பலி.
ஜன. 25: முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக முதல்வர் கருணாநிதி சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதி.
ஜன. 27: நெல்லை அருகே வேனும், லாரியும் மோதியதில் 6 பெண்கள் உட்பட 15 பேர் பலி. ஜன. 30: முத்துக்குமரன் தீக்குளிப்பு இலங்கையில் போரை நிறுத்தி தமிழர்களை காப்பாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை சாஸ்திரி பவன் முன் ஜன.30ல் முத்துக்குமரன் என்ற இளைஞர் தீக்குளித்தார்.
இந்தியா
ஜன.1: அசாமில் கவுகாத்தி நகரில் மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி.

ஜன. 8: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.

ஜன. 9: மே.வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் நந்திகிராமில் திரிணாமுல் வெற்றி. காங்கிரஸ், மா.கம்யூ., கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி.
ஜன.12: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த சிபு சோரன், எம்.எல்.ஏ.,வாக இல்லாததால் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜன. 20: உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பா.ஜ.,வில் இருந்து விலகல்.
ஜன. 24: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடந்தது.
* சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை டில்லி ஐகோர்ட் நீக்கியது.
ஜன. 25: நொய்டாவில் இருந்து டில்லிக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள்,போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை.
* இளம் பெண்கள் மீது தாக்குதல்: ஜனவரி 24: பெண்கள் போதைப் பொருட்களை உட்கொண்டு ஆபாசம் நடனம் ஆடுகின்றனர் என்று குற்றம்சாட்டி, ராம்சேனா அமைப்பினர், மங்களூரு ஓட்டலில் இருந்த பெண்கள் மற்றும் ஆண்களை கண்மூடித் தனமாக தாக்கினர். இதில் இரு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் அவர்கள் இறங்கியிருக்கக்கூடாது என்று கண்டனங்கள் எழுந்தன.
ஜன. 26: மும்பை தாக்குதலின் போது பயங்கரவாதிகளை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த ஹேமந்த் கர்காரே உள்ளிட்ட 11 பேருக்கு டில்லியில் குடியரசு தின விழாவின் போது "அசோக சக்ரா' விருது.
ஜன. 27: போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்து ராஜபக்சேயுடன் பேச இலங்கைக்கு சென்றார் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
ஜன. 31: அரசியல் சார்புடன் செயல்படும் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு கடிதம்.
உலகம்
ஜன. 2: விடுதலைப்புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றியது இலங்கை ராணுவம்.
ஜன. 4: இந்தோனேஷியாவின் பப்புவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் பலி.
ஜன. 6: வங்க தேசத்தில் நடந்த பார்லி., பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 230 இடங்களை கைப்பற்றியது.
* வங்கதேச அதிபர் இஜா உதீன் அகமது, அதிபர் மாளிகையில் ஷேக் ஹசீனாவுக்கும் 23 அமைச்சர்களுக்கும் ஜன. 6ம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஹசீனா பிரதமராக பதவி வகித்தார்.
ஜன. 7: விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை. ஜன. 9: பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலி.
ஜன. 12: "ஸ்லம்டாக் மில்லினர்' என் ஹாலிவுட் படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு "கோல்டன் குளோப்' விருது.
* பணியிடத்தில் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி பலியானதால், பக்ரைனில் உடன் பணியாற்றிய நான்கு இந்திய தொழிலாளர்கள் கைது.
ஜன. 15: சத்யம் நிறுவனத்தில் பணிபுரிந்த அக்ஷய் விஷால் என்ற இளைஞர் அமெரிக்காவில் ஆர்கான்சசில் சுட்டுக்கொலை.
* புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தலைவராக காஷ்மீரின் கூடுதல் டி.ஜி.பி., ராதா வினோத் ராஜு நியமனம்.
ஜன. 20:
வரவேற்றார்... விடைகொடுத்தார்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜன. 20ல், அதிபராக பதவியேற்றுக்கொண்டார். எட்டு ஆண்டுகாலம் அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் புஷ் மக்களிடம் இருந்து விடைபெற்றார்.
ஜன. 25: விடுதலைப்புலிகளிடம் இருந்து முல்லைத்தீவை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
ஜன. 29: அப்பாவி தமிழர்கள் வெளியேறும் வகையில் இலங்கையில் 48 மணிநேர போர் நிறுத்தம்.
விளையாட்டு
ஜன. 6: இலங்கை அணி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது.
ஜன. 7: தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஜன. 11: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரரான சோம்தேவ் தேவ்வர்மன், குரோஷியாவின் மரின் சிலிக்கிடம் தோல்வியடைந்தார். ஜன. 12: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஹைடன் ஓய்வு.
ஜன. 15: ரஞ்சி கோப்பை பைனலில் உ.பி., அணியை வீழ்த்திய மும்பை அணி 38 வது முறையாக கோப்பை வென்றது.
* பஞ்சாபில் நடந்த அகில இந்திய பளு தூக்கும் போட்டியில், அதிக புள்ளிகளை பெற்ற தமிழக அணி யினருக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
ஜன. 18: இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஜன. 31: புதிய வரலாறு: மெல்போர்ன் நகரில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் புதிய வரலாறு படைத்தார் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி. ஜூனியர் ஒற்றையர் பிரிவு பைனலில் யூகி பாம்ப்ரி, ஜெர்மனியின் அலெக்சாண்டிரோஸ் பெர்டினாண்டோஸ் ஜியார்கோடாசை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, முதன்முதலில் சாம்பியன் கோப்பை வென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற புதிய சாதனை படைத்தார்.
*
நான்காவது முறை ஜன. 31: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினாவை 6-0, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பை வென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலியன் ஓபனில் நான்காவது முறையாக (2003, 2005, 2007, 2009) பட்டம்


பிப்ரவரி

T

தமிழகம்

பிப். 2: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை ஏற்கலாம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.

பிப். 7: இலங்கை தமிழர் கொல்லப்படுவதை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் நிர்வாகி ரவிச்சந்திரன் தீக்குளித்து மரணம்.
பிப். 9: தமிழகத்தை சேர்ந்த சைமன் என்ற தொழிலாளி ஆப்கன் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
பிப். 10: மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட செல்லமுத்து என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. * இசை ரத்னா: கர்நாடக இசை மேதை பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு
பிப்., 10ல் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவரது வீட்டிற்கே சென்று மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் விருதை வழங்கினார்
பிப். 11: சென்னை போரூர் மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதிக்கு தண்டுவட அறுவை சிகிச்சை.
பிப். 19: சென்னை வக்கீல், போலீஸ் மோதல் காரணமாக மதுரை கோர்ட்டில் ஜப்தி செய்து நிறுத்தப்பட்டிருந்த மூன்று பஸ்களுக்கு தீவைக்கப்பட்டது.
பிப். 21: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தி.மு.க., இளைஞரணி நடத்திய மனித சங்கிலியில் சிவப்பிரகாசம் என்பவர் தீக்குளித்தார்.
பிப். 22: திருப்பூரை தமிழகத்தின் 32வது மாவட்டமாக உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* இலங்கை தமிழர் பிரச்னைக்காக தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை தமிழருவி மணியன் ராஜினாமா.
* இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் "3ஜி' சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி.
பிப். 25: இளையான்குடி எம்.எல்.ஏ., ராஜகண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா. தி.மு.க.,வில் இருந்தும் விலகினார். * இலங்கை போர்நிறுத்தத்தை வலியுறுத்தி சிவகாசியை சேர்ந்த தி.மு.க., தொண்டர் தீக்குளித்து பலி.
பிப். 27: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
பிப். 28: தூத்துக்குடிக்கு வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புகொடி காட்ட முயன்ற வைகோ கைது.
இந்தியா
பிப். 7: பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கர்நாடகாவில் 9 பேர் கைது.
பிப். 10: பாகிஸ்தானை தாக்கினால், இந்தியாவை அல்-குவைதா தாக்கும் என அதன் மூத்த கமாண்டர் முஸ்தபா அபு அல் யாஷித் எச்சரிக்கை.
* இந்தியாவில் மார்ட்டின் லூதர் மகன் அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் 1959ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அவரது இந்திய வருகையின் ஐம்பதாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அவரது மகன் மூன்றாவது மார்ட்டின் லூதர் கிங் பிப்.,10ல் இந்தியா வந்தார். சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மார்ட்டின், தனது இந்திய வருகை மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டார்.
பிப். 11: ஆந்திர சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., க்கள் மோதல்.
* மத்திய அமைச்சர் மகாவீர் பிரசாத் மீது கொலைவழக்கு தொடரப்பட்டது.
பிப். 13: தூக்கு தண்டனை: உ.பி.,யின் நொய்டாவில் குழந்தைகள் பலரை கொலை செய்யப்பட்ட வழக்கில் மொனிந்தர் சிங் மற்றும் அவரது பணியாளர் சுரிந்தர் கோலி ஆகியோருக்கு பிப்., 13ல், நொய்டா சி.பி.ஐ., கோர்ட் தூக்குதண்டனை விதித்தது. பின் செப்.11ல், இவர் களது தூக்கு தண்டனையை அலகாபாத் கோர்ட் ரத்துசெய்தது.
பிப். 17: தேர்தல் முடிவடைய 48 மணி நேரத்திற்கு முன்னதாக கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
பிப். 18: இலங்கை பிரச்னையில் தலையிட முடியாது என பார்லி.,யில் பிரணாப் அறிவிப்பு. பிப். 20: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் நெல்லையில் இயக்குனர் சீமான் கைது.

பிப்., 22: உலகை கவர்ந்த இசை! "ஸ்லம்டாக் மில்லினர்' என்ற ஹாலிவுட் படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். உலக சினிமா கலைஞர்களின் கனவாக திகழும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் வழங்கப்படுகின்றன. 2008ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிப். 22ல் நடந்தது. கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான விருது வழங்கும் இந்த விழாவில், இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான "ஸ்லம்டாக் மில்லினர்' படம் எட்டு விருதுகளை வாரி குவித்தது. இதில் சிறந்த பாடல், சிறந்த இசை ஆகிய இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த படத்தில் இடம் பெற்ற "ஜெய் ஹோ' சிறந்த பாடலாக தேர்வானதால் அதற்கான விருதை இந்தி பாடலாசிரியர் குல்சார் உடன் ரஹ்மான் பகிர்ந்து கொண்டார். இதுவரை எந்த இந்தியரும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றதில்லை. ஆஸ்கர் விருதை பெற மேடை ஏறிய ரஹ்மான் "எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் கூறினார். இந்த படத்தில் இடம்பெற்ற "ஜெய்ஹோ' மற்றும் "ஓ சாயா' பாடல்களை மேடையில் தோன்றி பாடிய ரஹ்மான் அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தார். "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக கோல்டன் குளோப், பாப்டா உள்ளிட்ட சினிமா உலகில் கவுரவமிக்கதாக கருதப்படும் பல விருதுகளை ரஹ்மான் வென்றார். "டைம்' பத்திரிகை 2009ம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிக்க 59வது நபராக ரஹ்மானை தேர்வு செய்தது. இதே படத்தில் பணியாற்றிய கேரளாவின் ரெசுல் பூக்குட்டி சவுண்ட் மிக்சிங்பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றார். இந்த படத்தின் இயக்குனரான பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்லுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. இந்தியாவில் எடுக்கப்பட்ட குறும்படமான "ஸ்மைல் பிங்கி' படமும் ஆஸ்கர் விருது வென்றது. இதற்கு முன்னர் "காந்தி' படத்தில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அத்தையா, பிரபல சினிமா இயக்குனர் சத்யஜித் ரே ஆகிய இரண்டு இந்தியர்கள் மட்டுமே ஆஸ்கர் வென்றுள்ளனர். \\

பிப்.23: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

பிப். 24: சென்னை ஐகோர்ட் மோதல் தொடர்பாக அ.தி.மு.க., ராஜ்யசபாவில் கடும் அமளி. பிப். 25: மாஜி மந்திரி சுக்ராமுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பு.

உலகம்

பிப். 2: பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சீன பிரதமர் உரையாற்றிய போது ஷூ வீசப்பட்டதால் பரபரப்ப

பிப். 8: இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் இருந்து 14 ஆயிரம் தமிழர்கள் வெளியேறினர்.

பிப். 9: பேப்பர் இல்லாத "பேப்பர்': இ-புத்தகங்கள், இ-பேப்பர்கள் படிக்க பிரத்யேகமாக "கிண்டில்' என்ற கருவியை அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் 2007ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த கருவியை மேம்படுத்தி "கிண்டில் 2' என்ற பெயரில் இந்த ஆண்டு பிப்., 9ம் தேதி வெளியிட்டது. 17 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவி தற்போது 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிப். 12: மும்பை தாக்குதல் சதி பாகிஸ்தானில் நடந்ததாக அந்நாடு ஒப்புதல். * விண்வெளியில் அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் மோதின. பிப். 13: அமெரிக்காவின் நியூயார்க் அருகில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் பலி. * ரயில் விபத்து: மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ், பிப்., 13 தேதிஒரிசாவின் ஜாஜ்பூர் ரோடு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி கிடந்தன. சக்கரங்களும், ஸ்பிரிங்களும் 300 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 15 பேர் பலியானார்கள். அடுத்த 2 நாட்களுக்கு அந்த பாதையில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. பிப். 24: புதுக்குடியிருப்பு பகுதியை புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றியது. பிப். 25: வங்கதேசத்தில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப்படை இடையே மோதல். 77 பேர் பலி. * பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடக்கூடாது என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. * "அவுட்சோர்சிங்' செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை ரத்து செய்தார் ஒபாமா. விளையாட்டு பிப். 1: முதல் வீராங்கனை: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் (பிப்.,1) கலப்பு இரட்டையரில் கோப்பை வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தனர் மகேஷ் பூபதி, சானியா. தவிர, கிராண்ட்ஸ்லாம் பட்டம் (சீனியர் பிரிவு) கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் சானியா.

பிப். 5: கொழும்புவில் நடந்த ஒரு நாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து 9 போட்டிகளில் வென்று சாதனை படைத்தது. * சுழல் ஜாலம் பிப். 5: ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார் இலங்கையின் முரளிதரன் (503 விக்.,). இவர், அக்ரம் (502 விக்.,) சாதனையை முறியடித்தார்.
பிப். 6: ஐ.பி.எல்., தொடருக்காக, இங்கிலாந்தின் பீட்டர்சன், பிளின்டாப் மிக அதிகமாக ரூ. 7.35 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
பிப். 8: இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
பிப். 9: பஞ் சாப்பில் நடந்த தங்க கோப்பை ஹாக்கி தொடரின் பைனலில் நெதர்லாந்து அணி, இந்தியாவை 2-1 என்ற

கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது

* துலீப் டிராபி பைனலில் மேற்கு மண்டல அணி, 274 ரன்கள் வித்தியாசத்தில் தெற்கு மண்டலத்தை வீழ்த்தி, 17 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பிப். 10: இலங்கை அணிக்கு எதிரான "டுவென்டி-20' தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

பிப். 27: இந்தியாவுக்கு எதிரான "டுவென்டி-20' தொடரை நியூசிலாந்து அணி 2-0 என கைப்பற்றியது


மார்ச்

தமிழகம்

மார்ச்.1: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது மட்டுமன்றி தங்குமிட வசதிகள் பற்றி அறிந்து கொள்ளwww.tiruchendurmurugantemple.com என்ற இணையதளம் துவக்கப்பட்டது.

* தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளwww.pallikalvi.in என்ற இணையதளத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.
மார்ச் 2: விடுதலைப்புலிகள் சீருடையில் வைகோ, பிரபாகரனுடன் இருக்கும் போட்டோக்களை இலங்கை ராணுவம் வெளியிட்டது.
* பொதுக்கூட்டத்தில் சட்டவிரோமாக பேசியதாக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி கைது.
மார்ச் 5: உண்ணாவிரதம்: இலங்கை பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ஜெயலலிதா மார்ச் 9ல், சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். மாலையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். மார்ச் 6: ஐகோர்ட் மோதலின் போது போலீசார் வரம்பு மீறியதாகவும், வக்கீல்கள் முறைகேடாக நடந்ததாகவும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை.
மார்ச் 7: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் சென்னையில் கைது.
மார்ச் 10: சூதாட்ட தகராறில் பழநி 30வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் கடத்திக் கொலை. மார்ச் 12: நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்.
மார்ச் 15: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாஞ்சில் சம்பத் சிறையில் அடைப்பு. மார்ச் 17: ம.தி.மு.க., வில் இருந்து விலகிய செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மார்ச்.17ல் தி.முக.,வில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து ம.தி.மு.க.வின் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., கண்ணப்பன், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க.வில் இணைந்தனர். இவர் களில் ராமக்கிருஷ்ணன் கம்பம் இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.
மார்ச் 19: ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
மார்ச் 26: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகல். மார்ச் 27: தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்க உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
மார்ச் 29: வீர வன்னியர் பேரவை நிறுவனர் ஜெகத்ரட்சகன் தி.மு.க.,வில் இணைந்தார். மார்ச் 31: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உறவினர்கள் ஐந்து பேரை அமெரிக்காவில் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை.
இந்தியா
மார்ச் 1: லோக்சபா தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
மார்ச் 8: ஒரிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளத்துக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., வாபஸ்.
* வருண்... சரண்! மறைந்த பிரதமர் இந்திராவின் பேரனான வருண், உ.பி.,யின் பிலிபித் தொகுதியில் பா.ஜ., சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் மார்ச் 6ல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத விரோதத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து மார்ச் 28ம் தேதி பிலிபித் கோர்ட்டில் வருண் சரணடைந்தார். பின்னர் கோர்ட் உத்தரவுப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஏப்ரல் 16ல் ஜாமீனில் விடுதலை ஆனார். மார்ச் 9: புதிய நீதிபதி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கோகலே, மார்ச் 9ல், ராஜ்பவனில் பதவியேற்றுக் கொண்டார். இவர் அலகாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். மார்ச் 11: ஒரிசாவில் குரல் ஓட்டெடுப்பு மூலமாக நவீன் பட்நாயக் அரசு வெற்றி. மார்ச் 17: மேற்குவங்கத்தின் ஜல்பைகுரியில் சைக்கிள் குண்டுவெடித்ததில் 2 பேர் பலி. மார்ச் 19: தெல்கிக்கு 7 ஆண்டு முத்திரைத்தாள் மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கு மார்ச் 19ல் ஆமதாபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குறைவான தண்டனை வழங்க வேண்டுமென தெல்கி விடுத்த வேண்டுகோளை நீதிபதி நிராகரித்தார். அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மார்ச் 22: நடிகை ஜேட்கூடி பிரிட்டன் காலமானார்
மார்ச் 27: குஜராத் வன்முறை தொடர்பாக அமைச்சர் மாயா கோட்னானி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
* குஜராத்தில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை வழக்கில் அம்மாநில அமைச்சர் மாயா கோட்னானிக்கு வழங்கிய ஜாமீனை ஐகோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீசில் அவர் சரணடைந்தார்.
மார்ச் 28: மத்திய அமைச்சர் பதவியை பா.ம.க., அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்தனர்.
மார்ச் 31: நடிகர் சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது சுப்ரீம் கோர்ட். * ஐஸ்வர்யா ராய், கணபதி ஸ்தபதி, எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்டோருக்கும் "பத்ம' விருதுகள் வழங்கப்பட்டன.
உலகம் மார்ச் 6: தேசத்தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் மார்ச் 6ல் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டன. காந்திஜி பயன்படுத்திய மூக்குக்கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், தட்டு, குவளை, செருப்பு ஆகியவற்றை ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர் ஏலத்தில் விட்டார். இதில் விஜய் மல்லையா சார்பில் கலந்து கொண்ட டோனி பேடி 9.3 கோடி ரூபாய்க்கு இவற்றை ஏலம் எடுத்தார். மார்ச் 10: இலங்கையில் நடந்த ராணுவ தாக்குதலில் 129 தமிழர்கள் பலி. * தெற்கு இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி. அமைச்சர் விஜயசேகரா படுகாயம். மார்ச் 11: ஜெர்மனியின் வின்னன்டென் பகுதியில் ஒரு பள்ளியில் நுழைந்து ஒருவன் வெறித்தனமாக சுட்டதில் 10 பேர் பலி. மார்ச் 16: சர்வதேச விண்வெளி நிலைய பராமரிப்பு பணிகளுக்காக அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் 7 வீரர்களுடன் வெற்றிகரமாக ஏவப்பட்டது. *
ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலி.
மார்ச்.17: கென்யாவில் குற்றவாளிகளிடம் இருந்து 2007ம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் தலைநகர் நைரோபியில் போலீஸ் பாதுகாப்புடன் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மார்ச்.22: முஷாரப் ஆட்சிக்காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் சவுத்ரி 16 மாதத்திற்கு பின் பாக்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மீண்டும் பதவி ஏற்றார்.
மார்ச் 26: இலங்கையில் வன்னிப் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 112 பேர் பலி. மார்ச் 27: பாகிஸ்தானின் ஜம்ரூத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 50 பேர் உடல் சிதறி பலி. * இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே அணை உடைந்து 70 பேர் பலி. மார்ச் 30: பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 போலீசார் பலி.
விளையாட்டு
மார்ச் 1: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.
மார்ச் 3: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.
மார்ச் 8: சீன தைபே அணிக்கு எதிரான "ஆசிய-ஓசியானா மண்டல குரூப்-1' டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
* லினாரஸ் செஸ் தொடரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 4வது இடம் பிடித்தார். மார்ச் 14: நியூசிலாந்து மண்ணில் கடந்த 33 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி(3-1) வரலாறு படைத்தது.
மார்ச் 15: ஜூனியர் ஹாக்கி தொடரின் பைனலில் பாகிஸ்தான் அணி "கோல்டன் கோல்' மூலம் இந்திய அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது.
மார்ச் 20: இஸ்தான்புல் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
மார்ச் 21: ஹாமில்டன் போட்டியில் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
* பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3வது இடம் பிடித்தது.
மார்ச் 22: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பை வென்றது.
மார்ச் 24: லோக்சபா தேர்தல், பாதுகாப்பு பிரச்னை காரணமாக, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) இரண்டாவது "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டது. மார்ச் 25: கோல்கட்டா நைட் ரைடர்ஸ் (ஐ.பி.எல்.,) அணியின் கேப்டன் பதவியிலிருந்து சவுரவ் கங்குலி நீக்கம்


ஏப்ரல்


தமிழகம்

ஏப். 1: சேது சமுத்திர திட்டத்துக்காக நடந்த உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.
ஏப். 2: இயக்குனர் பாலாஜி காலமானார். ஏப். 6: புதுச்சேரி கவர்னர் குஜ்ஜார் காலமானார்
ஏப். 8: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்.
ஏப். 9: தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதிக்கு கோவை பாரதியார் பல்கலை., கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
ஏப். 19:பிரபாகரன் பயங்கரவாதி அல்ல, எனது நண்பர் என தமிழக முதல்வர் கருணாநிதி பேட்டி.
* தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ம.தி.மு.க., பிரமுகர் நாஞ்சில் சம்பத் கைது ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
ஏப். 23: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க., சார்பில் "பந்த்'.
* இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை.
ஏப். 25: தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான "சிடி'க்கள் வைத்திருப்பதாக சசிகலா கணவர் நடராஜன் வீட்டில் போலீசார் திடீர் ரெய்டு.
* அதிகாரி கைது பாஸ்போர்ட் வழங்க ஏஜன்ட்களிடம் லஞ்சம் வாங்கியதாக ஏப்., 25ல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஏப். 27: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி விடுதலை.
*
முதல்வர் உண்ணாவிரதம்: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போர்நிறுத்தம் குறித்த உலக நாடுகளின் கோரிக்கையை அந்நாடு ஏற்கவில்லை. இலங்கையை கண்டித்து ஏப்., 27ம் தேதி காலையில் சென்னையில் முதல்வர் கருணாநிதி திடீரென காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். தமிழர் பகுதிகளில் குண்டுவீச்சு மற்றும் விமான தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அறிவித்ததை தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஏப். 29: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மன

சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி.

* விபத்து மர்மம்: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு புறப்படவிருந்த புறநகர் ரயிலை, மர்ம மனிதன் ஒருவன் கிளப்பி அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றான். ரயில் கட்டுப்பாட்டை இழந்து, வியாசர்பாடி ஜீவா ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த எண்ணெய் சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். ஏப்., 29ல் நடந்த இந்த சம்பவத்தில் ரயிலை ஓட்டிக்கொண்டு வந்தது யார் என்பது பற்றிய மர்மம் நீடிக்கிறது.
இந்தியா
ஏப். 1: ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் வீசிய கடும் சூறாவளிக்காற்றில் 10 பேர் பலி. * கார் கனவு பலித்தது: டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் காரான "நானோ' இந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதற்கான புக்கிங் நாடு முழுவதும் ஏப்., 1ல் துவங்கியது. முதல் கட்டமாக ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய புக்கிங் நடந்தது. டில்லி, மும்பை போன்ற நகரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கார்களை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு சென்றனர்.
ஏப்., 2 : சீக்கியர்களின் கோபம்: 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் காங்கிரசின் ஜெகதீஷ் டைட் லருக்கு எந்த தொடர்பும் இல்லை என சி.பி.ஐ., ஏப்., 2ல் டில்லி ஐகோர்ட்டில் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீக்கியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா தேர்தல் போட்டியிலிருந்து டைட்லர் விலகினார்.
ஏப். 6: அசாமின் கவுகாத்தி நகரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 8 பேர் பலி.
* ஐ.நா., பொதுச்சபை செயலரின் ஆலோசகராக நிருபம் சென் நியமனம்.
ஏப்.7: வருணை ரோடு ரோலர் கொண்டு நசுக்கியிருப்பேன் என கூறிய லாலுவுக்கு எதிராக வழக்கு பதிவு.
ஏப். 10: டில்லி அருகே குருஷேத்ராவில் காங்கிரஸ் எம்.பி., நவீன் ஜிண்டால் மீது ஓய்வுபெற்ற ஆசிரியர் "ஷூ'வை வீசியதால் பரபரப்பு.
ஏப். 14: டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்
ஏப். 15: பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் போலீசாருடன் நடந்த மோதலில் 5 போலீசார் கொல்லப்பட்டனர்.
* மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் வக்கீலாக அஞ்சலி வாக்மரே நியமிக்கப்பட்டதை, சிறப்பு கோர்ட் ரத்து.
ஏப். 17: மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் தொடர்பான வழக்கு விசாரணை துவங்கியது.
ஏப். 18: உ.பி., முதல்வர் மாயாவதிக்கு எதிராக அவதூறாக பேசிய பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீது வழக்கு.
ஏப். 20: "பி.எஸ்.எல்.வி.,-சி 12' ராக்கெட் "ஆர்.ஐ., சேட் -2' மற்றும் "அனு சேட்' ஆகிய இரு செயற்கைகோள்களை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் செலுத்தியது.
ஏப். 21: மகாராஷ்டிரா மாநிலம் துலே தொகுதியில் நடிகர் ஜிதேந்திரா பிரசாரம் செய்து கொண்டிருந்த போது செருப்பு வீச்சு.
* புதிய தலைமை கமிஷனர்: இந்தியாவின் 16வது தலைமை தேர்தல் கமிஷனராக நவீன் சாவ்லா ஏப்.21ல், பதவி ஏற்றார். இவருடன் தேர்தல் கமிஷனர்கள் வி.எஸ்.சம்பந்த் (இடது) மற்றும் எஸ்.ஒய்.குரேஷி. * விஷ்ணு பிரபாகர் (சாகித்ய அகாடமி விருது பெற்றவர்) காலமானார்.
ஏப். 22: பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பந்த் அனுசரித்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள், 700 பயணிகளுடன் சென்ற ரயிலைச் சிறை பிடித்தனர்.
ஏப். 23: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் விஜயகுமாருக்கு பிரதமர் விருதை துணை ஜனாதிபதி அமீது அன்சாரி வழங்கினார்.
ஏப். 26: நடிகர் பெரோஸ்கான் காலமானார். ஏப். 28: போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒட்டாவியோ குட்ரோச்சியின் பெயர் சி.பி.ஐ.,யின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கம்.
ஏப். 31: எழுத்தாளர் கமலா சுரைய்யா காலமானார்
உலகம்
ஏப். 3: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண குடியேற்ற சேவை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலி.
* மலேசியாவின் புதிய பிரதமராக நஜீப் ரசாக் பதவியேற்றார்.
ஏப். 5: புதுக்குடியிருப்பை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
* பாகிஸ்தானில் சக்வால் என்ற இடத்தில் மசூதி அருகே தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி.
ஏப். 6: இத்தாலியில் ரோம் அருகே உள்ள அகுயிலாவில் பூகம்பம் ஏற்பட்டதில் 90 பேர் பலி.
ஏப். 11: இலங்கையில் முல்லைத்தீவு அருகே நடந்த சண்டையில் 47விடுதலைப்புலிகள் பலி.
ஏப். 15: அமெரிக்க கப்பல் மீது சோமாலிய கொள்ளையர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
ஏப்.19: முல்லைத்தீவில் நடந்த சண்டையில் 17 விடுதலைப்புலிகள் பலி.
ஏப். 20: இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு வெளியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏப். 22: இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை ஐ.நா., விசாரிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியது.
ஏப். 23: ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், போலந்து சென்றார்.
விளையாட்டு
ஏப். 6:
உலக சாதனை: நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில், இந்திய வீரர் டிராவிட் டெஸ்ட் அரங்கில் அதிக "கேட்ச்' (183) பிடித்த "பீல்டர்' என்ற உலக சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் (181 "கேட்ச்') சாதனையை தகர்த்தார்.
ஏப். 7: 41 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து மண்ணில் ஏப்., 7ல் தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்து காட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப் பற்றி, கோப்பை வென்றது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 1967-68 ம் ஆண்டு பட்டோடி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.
ஏப். 10: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஏப். 12: மலேசியாவில் உள்ள இபோ நகரில் நடந்த, 18வது அஸ்லான் ஷா ஹாக்கி தொடரின் பைனலில் இந்திய அணி, மலேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 13 ஆண்டுகளுக்கு பின், 4வது முறையாக கோப்பை வென்றது.
ஏப். 15: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 50 மீ., ரைபிள்-3 தனிநபர் பிரிவில், இந்தியாவின் ககன் நரங் தங்கப் பதக்கம் வென்றார். ஏப். 18: இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது.
ஏப். 25: பாதுகாப்பு காரணமாக சென்னையில் நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா மறுத்தது. இந்திய அணி வென்றதாக அறிவிப்பு.


மே

தமிழகம்

மே 2: கோவையில் ராணுவ வண்டிகள் மீது ம.தி.மு.க., மற்றும் பெரியார் தி.க., வினர் தாக்குதல் நடத்தினர்.
மே 4: ஜல்லிக்கட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பாக நடத்தப்படும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி.
* புரோட்டா கடையில் வேலைபார்த்துக் கொண்டே படித்த வீரபாண்டியன், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 53வது இடம் பெற்றார்.
மே 6: நாமக்கல் அருகே வளையப்பட்டி தவிடு உற்பத்தி மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலி.
மே 7: கரூரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தம்பித்துரை வீட்டில் வருவாய் துறை, போலீஸ் உயர் அதிகாரிகள் திடீர் சோதனை.
மே 9:
பிரதமருடன் முதல்வர்: ஒரே நேரத்தில் காய்ச்சல் காரண மாக முதல்வர் கருணா நிதியும், மூட்டுவலி காரணமாக கவர்னர் பர்னாலாவும், உடல் நலக் குறைவு காரணமாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரனும் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மே 9ல், சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங் மூவரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
மே 15: இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக ஏழு கோடி மதிப்புள்ள பொருட்கள் தமிழக அரசின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
* மதுரை ரிங்ரோட்டில் ஆட்களை ஏற்றிவந்த வேன் மீது தனியார் பஸ் மோதியதில் 17 பேர் பலி.
மே 26: திருச் செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது.
*பெரியார் அணைக்கு சென்று திரும்பிய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தாக்கினர்.
மே 29: தமிழகத்தின் துணை முதல்வராக ஸ்டாலின் நியமனம்.
இந்தியா
மே 7: ஆந்திர தலைமைச் செயலகத்தில் தீ விபத்து.
மே 8: ஸ்வாட் பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக செயல்படும் தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்முவில் கடையடைப்பு.
* கல்லூரிகளில் ராகிங் அபாயத்தை ஒழிக்க கமிட்டிகளை அமைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
மே 9: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சித்து பேசியதற்காக காங்கிரஸ் மீடியா பிரிவு தலைவர் பதவியிலிருந்து வீரப்பமொய்லி நீக்கப்பட்டார்.
மே 11: "டிவி' நடிகை சில்மிஷ வழக்கில் கேரளாவின் முன்னாள் அமைச்சர் ஜோசப்பை ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் விடுதலை செய்தது. மே 16: இந்தியாவில் பதினைந்தாவது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாயின. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 261 இடங்களைக் கைப்பற்றியது.
மே 20: சிக்கிம் முதல்வராக தொடர்ந்து 4வது முறையாக பவன் குமார் சாம்லிங் பதவியேற்றார்.
மே 22: இந்திய பிரதமராக டாக்டர் மன்மோகன்சிங் மீண்டும் பதவியேற்பு. அவருடன் 19 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மே 23: அய்லா பயங்கரம்: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தையும், வங்க தேசத்தையும் மே 23ல் "அய்லா' புயல் தாக்கியது. மேற்கு வங்கத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்த புயலுக்கு 330 பேர் பலியாகினர்.இந்தியாவில் மட்டும் 150 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட சுந்தர்பன், போலா பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப பல வாரங்கள் ஆகின.
மே 24: உ.பி., மாநில சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கான் பதவி நீக்கம்.
* நக்சலைட் தலைவர் சுதாகர் ரெட்டியை வாரங்கல்லுக்கு அருகே ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர்.
* ஆந்திராவில் அடிலாபாத் அருகே மின்நிலைய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி.
* ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள ருடோல்ப்செய்ம் என்ற இடத்தில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் சந்த் ராமானந்த் பலி.
மே 25: ஒரிசாவின் சட்டசபை சபாநாயகராக பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரதீப்குமார் அமத் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* ஆஸ்திரிய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஜலந்தரில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி.
மே 27: ஆஸ்.,யில் இனவெறி: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் நான்கு பேரை மே 27ல், மது அருந்திய கும்பல் ஒன்று தாக்கியது. இதில் சிரவண் குமார் என்ற மாணவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஆண்டு முழுவதும் தொடர்ந்தது.
மே 28: புதிய அமைச்சர்கள்: நாட்டின் 15வது லோக்சபாவில் மே.28ல், புதிய அமைச்சர்கள் பலர் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த மு.க.அழகிரி ஆர்.ராசாவும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மே 31: இந்திய விமானப்படை புதிய தளபதியாக பிரதீப் வசந்த் நாயக் பொறுப்பேற்பு.
உலகம்
மே 1: முல்லைத் தீவு கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 23 கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.
மே 4: நேபாள பிரதமர் பிரசாண்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மே 6: சண்டையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் வலியுறுத்தினார்.
மே 10: இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
மே 13: ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரத்தில் அமெரிக்க ராணுவ தளம் அருகே கார் குண்டு வெடித்ததில் ஏழு பேர் பலி.
மே 18: இலங்கை போரில் பிரபாகரன் பலியானதாகவும் மறுநாள் நந்திக்கடல் பகுதியில் உடல் மீட்கப்பட்டது எனவும் இலங்கை அரசு அறிவித்தது.
மே 20: இந்தோனேசியாவின் மாகிடான் நகரம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியதில் 93 பேர் பலி.
மே 21: "ஹாட்ரிக்' முதல்வர்: ஒரிசா மாநிலத்தின் புதிய முதல்வராக நவீன் பட்நாயக் மே.21ல் பதவியேற்றார். ஒரிசாவில் வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்று நவீன் சாதனை படைத்துள்ளார். லோக்சபா தேர்தலோடு ஒரிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 103 தொகுதிகளை கைப்பற்றி பிஜு ஜனதா தளம் ஆட்சியை பிடித்தது. முதல்வருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
மே 23: நேபாள நாட்டின் லலித்பூர் மாவட்டம் தோபிகட் பகுதியில் உள்ள சர்ச்சில் நடந்த குண்டுவெடிப்பில் 2 இந்தியர்கள் பலி. மே. 25: வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்தியது.
* நேபாளத்தில் "நேபாள்' நேபாளத்தின் புதிய பிரதமராக மாதவ் குமார் நேபாள் மே 25ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இவருடன் இரு அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றுக் கொண்டனர்.
மே 26: வடகொரியா இரண்டு குறுகிய தூர ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
மே 27: பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் கார்வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி.
விளையாட்டு
மே 1: ஜெர்மனி, சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் ஒற்றையரில் இந்திய வீரர் ஆஷர் நோரியா தங்கம் வென்றார்.
மே 2: டில்லி, ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
மே 6: 2வது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் ரோகித் சர்மா, மும்பை அணிக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
மே 8 : செஸ் கிங் உலக செஸ் அரங்கில் இந்தியாவின் அசத்தலான வீரர் விஸ்வநாதன் ஆனந்த். இவருக்கு இந்த ஆண்டுக்கான செஸ் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்த விருதை ஆறாவது முறையாக (1997, 1998, 2003, 2004, 2007, 2008) கைப்பற்றி சாதித்தார். இவ்விருதை இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் (11), அமெரிக்காவின் பாபி பிஸ்ஷர் (3) பெற்றுள்ளனர்.
மே 14: கஜகஸ்தானில் நடந்த குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் நானோ சிங் (48 கி.கி.,) தங்கம் வென்றார்.
மே 17: ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங் "பிளை வெயிட்' பிரிவில் தங்கம் வென்றார்.
மே 18: இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது.
மே 24: இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பையை கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது. மே 26: இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது.
மே 27: மைக் டைசனின் நான்கு வயது மகள் எக்சோடஸ், உடற் பயிற்சி இயந்திரத்தில் கழுத்து சிக்கி மரணம் அடைந்தார்.
ஜூன்

தமிழகம்

ஜூன் 1: இந்தியாவிலேயே முதல்முறையாக கண்பார்வையற்ற சக்கரவர்த்தி என்பவர் கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் முன்சீப் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார்.
ஜூன் 3: திருச்சி மேயராக சுஜாதா பதவியேற்றார்.
ஜூன் 10: ரவுடி "வெல்டிங்' குமார் சென்னை புழல்சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த தகராறில் கொல்லப்பட்டார்.
ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார்.
ஜூன் 14: திருச்சி மருங்காபுரி அருகே மல்லிகைப்பட்டியில் சமத்துவபுரத்தை கருணாநிதி திறந்து வைத்தார்.
ஜூன் 16: மதுரை விரகனூர் ரிங் ரோடு பாலத்தின் அடியில், கூஜா வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
ஜூன் 18: அல்ஜீரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய அப்பாசி சலீம் என்ற பயங்கரவாதி சென்னையில் பிடிபட்டான்.
ஜூன் 27: சென்னை கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் குமார் வெடிகுண்டுகளை வீசி, வெட்டிக் கொலை.
ஜூன் 30: கல்லூரிக்கு வரும்போது சேலை அணியவேண்டும் என பயிற்சி மாணவியை கட்டாயப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு.
இந்தியா
ஜூன் 1: பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 32 கி.மீ., தொலைவில் உள்ள குஸ்ரூபூரில் 2 ரயில்களை கிராம மக்கள் தீ வைத்து எரித்தனர்.
* பதினைந்தாவது லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக மாணிக் ராவ் கேவிட்டுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப்பிரமாணம்.
ஜூன் 4 : முதல் பெண் சபாநாயகர்: பதினைந்தாவது லோக்சபாவில் நாட்டின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜூன் 4ல், சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜூன் 5: பாகிஸ்தான் பயங்கரவாதியும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் கமாண்டருமான முகமது உமர் மத்னி டில்லியில் கைது.
ஜூன் 7: மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., பதம்சிங் பாட்டீல், இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.ஐ., போலீசாரால் கைது.
* லோக்சபா துணை சபாநாயகராக பா.ஜ.,வின் கரியமுண்டா தேர்வு.
ஜூன் 13: பா.ஜ., வின் துணைத்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த்சின்கா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா
* மர்மமான முறையில் காணாமல் போன அணு விஞ்ஞானி மகாலிங்கத்தின் உடல், கர்நாடகாவின் காளியாற்று படுகையில் மீட்கப்பட்டது.
ஜூன் 15:
நடிகர் ஷைனி அகுஜா கைது: பிரபல பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர் ஜூன்.15ல், அவரது வீட்டில் வேலை பார்த்த 19 வயது பெண்ணை கற்பழித் ததாக கைது செய்யப்பட்டார். பின் அக்.3ல் ஜாமீனில் விடு தலையானார்.
ஜூன் 16: பா.ஜ., கட்சியின் பொதுச் செயலர் பதவியை அருண் ஜெட்லி ராஜினாமா செய்தார்.
ஜூன் 17: மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் தலைவர்கள் மூன்று பேர் மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொலை.
* தலிபான்கள் பலி: ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்., எல்லையில் அமைந்த தெற்கு வசீர் ஸ்தான் பகுதிகள் "டெஹ்ரிக் இ தலிபான்' பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்தது. இவற்றை அழிக்க ஜூன் 19ல், பாக்., ராணுவம் போர் விமானங்கள், பீரங்கிகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. 2 நாட்கள் நடந்த தாக்குதலில் தலிபான் கமாண்டர் குவாரி உசேன் உட்பட 50க்கும் மேற்பட்ட பயங்கர வாதிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகின. ஜூன் 22: மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்புக்கு மத்திய அரசு தடை .
ஜூன் 24: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங்கின் மறுசீராய்வு மனுவை பாக்., சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிப்படுத்தியது.
ஜூன் 25 : சவால் பணியில் நிலேகனி: இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள எண் அட்டை வழங்குவதற்கான திட்டப்பணிகளை மத்திய அரசு துவக்கியது.திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி ஜூன் 25ல், நியமிக்கப்பட்டார். கேபினட் அந்தஸ்து கொண்ட பதவிக்கு தேர்வானதை தொடர்ந்து தனது இன்போசிஸ் பதவியை நிலேகனி ராஜினாமா செய்தார்.
ஜூன் 27: முதல்வர் பொக்ரியால் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பா.ஜ.,வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் கந்தூரி பதவி விலகினார். ஜூன் 27ல், ரமேஷ் பொக்ரியால் புதிய முதல்வரானார்.
ஜூன் 29: மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசின் இடைக்கால அதிபராக மைக்கேல்லெட்டி பொறுப் பேற்றார்.
ஜூன் 30: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கையை சமர்பித்தது.
உலகம்
ஜூன் 1: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு அந்நாட்டு பிரதமர் கெவின் ரூத் கண்டனம்.
* மோசமான விபத்து: பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் இருந்து பாரீசிற்கு சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் ஜூன் 1ல், அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இந்த விபத்தில் 228 பயணிகள் பலியாகினர். 12 விமானங்கள் 3 கப்பல்களின் உதவியுடன் கடுமையான முயற்சிக்கு பின்னர் உடல்களையும், விமானத்தின் பாகங்களையும் மீட்புப்படையினர் மீட்டனர். எனினும் விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏர் பிரான்சின் மிக மோசமான விபத்து இது.
ஜூன் 2: மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தை லாகூர் ஐகோர்ட் விடுதலை செய்தது.
* ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நர்சிங் பயின்று வரும் நர்தீப் சிங் என்ற மாணவன் மீது இனவெறிக் கும்பல் தாக்குதல்.
ஜூன் 4: தாவூத் இப்ராகிமின் கூட்டாளி தாவூத் ரயூப் மெர்சன்ட் என்பவனை வங்கதேச போலீசார் தாகாவில் கைது செய்தனர்.
ஜூன் 5: பாக்., வடமேற்கு மாகாணத்தில் உள்ள திர் மாவட்டத்தில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 40 பேர் பலி.
ஜூன் 13: ஈரானில் மீண்டும் அதிபராக மகமூத் அகமதி நிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 16: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் பலி.
ஜூன் 18: அமெரிக்க பாப் இசைப்பாடகி மடோனா, மலாவி நாட்டு கறுப்பினக் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள மலாவி நாட்டு கோர்ட் அனுமதியளித்தது.
ஜூன் 22: ரஷ்யாவில் உள்ள இங்குஷ்தியா நாட்டின் அதிபர் யூனுஷ் பெக் கார்குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தார். அவரது தம்பி பலியானார்.
ஜூன் 30: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு உதவி அதிகாரியாக காஷ்மீரை சேர்ந்த பாரா பண்டித் நியமிக்கப்பட்டார்.
* ஏமன் நாட்டு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
* மறைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் மற்றும் அவரது குழந்தைகளுக்கு தற்காலிக பாதுகாவலராக அவரது தாயார் நியமிக்கப்பட்டார்.
விளையாட்டு
ஜூன் 2: பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக துவக்கப்பட்ட கபில்தேவின் ஐ.சி.எல்., அமைப்பில் இருந்து 79 இந்திய வீரர்கள் விலகினர்.
ஜூன் 6: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட் சோவா கைப்பற்றினார்.
* பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் லூயி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இது கிராண்ட்ஸ் லாம் அரங்கில் பயஸ் வெல்லும் 9வது பட்டம்.
ஜூன் 13: ஆசிய குத்துச்சண்டை தொடரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் சுரன்ஜாய் சிங் (51 கி.கி.,) தங்கம் வென்றார்.
ஜூன் 15: உலக கோப்பை "டுவென்டி-20' தொடரில் அரையிறுதிக்கு செல்லாமல் இந்திய அணி வெளியேறியதற்கு கேப்டன் தோனி, மன்னிப்பு கேட்டார்.

ஜூலை


தமிழகம்

ஜூலை 1: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்.
* சென்னையில் என்.எஸ்.ஜி.,: கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) பிரிவுகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. முதல் பிரிவு மும்பையில் துவக்கப்பட்டது. சென்னையில் ஜூலை 1ல், என்.எஸ்.ஜி., பிரிவை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் துவக்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ஜூலை 7: கூட்டுறவு வங்கிகளின் பண்ணைசாரா கடன்களுக்கான வட்டி 12 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பு.
*
பட்டாசு பயங்கரம்: உசிலம்பட்டி அருகே வடக்கம் பட்டியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஜூலை 7ல், தீவிபத்து ஏற்பட்டது. பட்டாசு வைத்திருந்தகட்டடம் முழுவதும் தீப்பிழம்பாக மாறியது. நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் பல மீட்டர் தூரம் தூக்கிவீசப்பட்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து பட்டாசு விபத்து தமிழகத்தில் தொடர்கதையானது.
ஜூலை 8: கர்னல் மோகன்லால்: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஜூலை 8ல், இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இளைஞர்களை கவரும் வகையில் திரைப்படங்களில் ராணுவ வீரர் வேடங்களை ஏற்று நடித்ததற்கு அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டது.
ஜூலை 9: திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாயமான மடாதிபதி லட்சுமண ராமானுஜ ஜீயர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர். * கனகம்மாசத்திரம் அருகே கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி சுட்டுக்கொலை. போலீஸ்காரர் கைது.
ஜூலை 12: பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறைகளை அமைச்சர் துரைமுருகனிடமிருந்து முதல்வர் ஏற்பு.
ஜூலை 20: சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி - எம்.புதுப் பட்டி செல்லும் ரோட்டில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி.
ஜூலை 24: வடசென்னையை சேர்ந்த நகைவியாபாரி சுரேஷ்குமாரை கொலை செய்த வடமாநில நகைக்கடை ஊழியர் நேமிசந்த் சவுத்ரி கைது செய்யப்பட்டார். ஜூலை 26: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., அரிஹந்த் என்ற முதல் அணு சக்தி நீர்மூழ்கிக்கப்பலை, விசாகப்பட்டினத்தில் பிரதமர் மனைவி குர்ஷரன் கார் ஜூலை 26ல், தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார்.
ஜூலை 31: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்தியா ஜூலை 2: ஓரினச் சேர்க்கையை தடைசெய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் 377 வது பிரிவு செல்லாது என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு. ஜூலை 12: டில்லியில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கட்டப்பட்ட புதிய ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி.
* மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் நீக்கம். ஜூலை 16: உ.பி., முதல்வர் மாயாவதி பற்றி அவதூறாக பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுணா கைது செய்யப்பட்டார்.
ஜூலை 17: நிலவை சுற்றி வரும் இந்திய செயற்கைக்கோள் சந்திரயானின் முக்கிய சென்சார் செயலிழந்தது.
* ஹிலாரி வருகை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஜூலை 17ல், ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஹிலாரி, ஜூலை 20ல் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அமெரிக்கா வரும்படி மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்த ஹிலாரி பின்னர் எதிர்க்கட்சி தலைவர் அத்வானியை சந்தித்தார். ஜூலை 20ல் இந்திய பயணத்தை நிறைவு செய்துவிட்டு தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
ஜூலை 19: பிரஜா ராஜ்யம் கட்சிக்கு சூரியன் சின்னத்தை நிரந்தர சின்னமாக மத்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.
ஜூலை 23: ஏழைகளுக்கான தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் சென்னையில் துவக்கி வைத்தனர்.
ஜூலை 26: மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில்கேட்சுக்கு, இந்திரா காந்தி சர்வதேச அமைதி விருதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார்.
ஜூலை 22: வானியல் அற்புதம் இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சூரிய கிரகணம் இந்தியாவிலும், சீனாவிலும் ஜூலை 22ல் ஏற்பட்டது. புனித நகரான வாரணாசியில் சூரிய கிரகணம் சில நிமிடங்கள் நீடித்தது.
ஜூலை 30: கான்ட்ராக்டரிடம் லஞ்சம் கேட்டதாக, தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சரோப்ஜித்சிங் சிங்கை சி.பி.ஐ.,போலீசார் கைது செய்தனர்.
ஜூலை 31: ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜகதானந்த பாண்டா தனது மனைவி, தந்தை, மகன், இரு சகோதரிகள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை.
உலகம்
ஜூலை 4: வடகொரியா ஆறு ஏவுகணைகள் சோதனையை நடத்தியது.
ஜூலை 5: சீனாவின் உரும்கி பகுதியில் இரு தரப்பினர் இடையே நடந்த கலவரத்தில் 140 பேர் படுகொலை.
ஜூலை 9: ஈராக்கில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 45 பேர் பலி. ஜூலை 10: தலிபான்கள் மீது பாகிஸ்தான் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 39 பேர் பலி.
* ரோம் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்திப்பு. ஜூலை 12: இலங்கை ராணுவ தலைமை தளபதியாக சரத் பொன்சேகா நியமனம்.
ஜூலை 14: பிரான்சின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார்.
* காந்தி மற்றும் நேருவின் கடிதங்கள் லண்டனில் 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம்.
ஜூலை 15: ஈரான் நாட்டின் டெக்ரான் நகருக்கு அருகில் காஸ்வின் என்ற இடத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 168 பேர் பலி.
* அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு, எகிப்தின் ஷரம் எல்-ஷேக் நகரில் துவங்கியது.
ஜூலை 17: விமான கடத்தல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீபை விடுதலை செய்து அந்நாட்டு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
ஜூலை 19: மலேசியாவில் இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான உதயகுமார், மனித உரிமை கட்சியை துவக்கினார்.
ஜூலை 21: மியான்மரைச் சேர்ந்த ஆங் சான் சூகிக்கு, தென்ஆப்ரிக்காவைச் சேர்ந்த மகாத்மா காந்தி அறக்கட்டளை நிறுவனம் அமைதிக்கான சர்வதேச மகாத்மா காந்தி விருது வழங்கியது.
ஜூலை 22: பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கில் அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31 தலிபான் பயங்கரவாதிகள் பலி.
ஜூலை 23: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் மகன் சாத் அமெரிக்க விமான தாக்குதலில் பலி.
விளையாட்டு
ஜூலை 4: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜூலை 10: அமெரிக்க சாம்பியன்ஷிப் நீச்சல், 100 மீ., "பட்டர்பிளை' பிரிவில், மைக்கேல் பெல்ப்ஸ், 50.22 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.
ஜூலை 12: ஜெர்மனி, சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர் விர்தவால் காதே 50 மீ., "பிரிஸ்டைல்' பிரிவில் தங்கம் வென்றார்.
ஜூலை 15: வரும் 2011 ம் ஆண்டு நடக்க இருக்கும் உலககோப்பை (50 ஓவர்) மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜூலை 20: அமெரிக்காவில் நடந்த இளைஞர்கள் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, தங்கம் வென்றார்.
ஜூலை 21: வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்று, அன்னிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதித்தது.
ஜூலை 26: அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் நடந்த ஐ.டி.எப்., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜூலை 30: நியூசிலாந்து ஓபன் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ருபேஷ் குமார், சனவே தாமஸ் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.
* பிரிஸ்பேனில் நடந்த வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது.

ஜூன் 21: "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் பைனலில் பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஜூன் 29: வெண்கல நாயகன் ஜெர்மனில் கிராண்ட்பிரிக்ஸ் மல்யுத்த தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் சுஷில் குமார், "பிரிஸ்டைல்' 66 கி.கி., எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தா

ஆகஸ்ட்
தமிழகம்
ஆக., 2: திருவாங்கூர் ராஜவைத்தியசாலை டாக்டர் விஜயகுமார் மீது 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆக., 5: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலைவழக்கில் இன்ஜினியரிங் கல்லூரி அதிபர் எஸ்.ஏ.ராஜா உட்பட ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவு.
ஆக., 6: லஞ்சம் வாங்கிய, தமிழக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் எழிலரசி கைது.
* நிவாரண கப்பல் "எம்.சி.பி., ஆம்ஸ்டர்டாம்' கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது.
ஆக., 10: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.,வில் இணைந்தார்.
* தமிழகத்தில் முதல்முறையாக பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் பலி.
* கம்பம் இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சசிக்குமார் மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
ஆக., 18: தமிழகத்தில் பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. 67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
ஆக., 21: கலர் "டிவி' ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
* தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி. ஆக., 24: சென்னைக்கு அருகே பனையூரில் கப்பல் கேப்டனாக இருந்த இளங்கோ என்பவரின் வீட்டில் சண்முகசுந்தரம் என்பவர் நுழைந்து சுட்டதில் 2 பேர் பலி.
ஆக., 26: அடுத்த கல்வி ஆண்டில் இருந்து(2010 - 2011) ஒன்றாம் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வி துவக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
ஆக., 27: கிராமப்புற உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்வு.
ஆக., 28: சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆறு குழந்தைகளை கொன்ற பெண் மந்திரவாதி பெருமாயி கைது. * சென்னை மியாட் மருத்துவமனையில் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் உடல் தானம் செய்வதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து.
ஆக., 31: துணைவேந்தர் சஸ்பெண்ட் கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து ஆக., 31ல் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்தியா
ஆக., 1: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் இருவர் பலி.
* எல்லைப் பாதுகாப்புப்படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக ராமன் ஸ்ரீவத்சவா டில்லி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
* புதிய செயலர்: வெளியுறவுத்துறை செயலராக இருந்த சிவசங்கர் மேனன் ஓய்வு பெற்றதை தொடந்து கடந்த ஆக. 1ல், புதிய செயலராக நிருபமா ராவ் பொறுப்பேற்றார். சோகிலா அய்யருக்கு பின் பொறுப் பேற்றுள்ள இரண்டாவது பெண் இவர். மும்பை தாக்குதல், இந்தியா-பாக்., கூட்டறிக்கை போன்ற நெருக்கடியான சூழலில் நிருபமா ராவ் பதவியேற்றார். ஐ.எப்.எஸ்., அதிகாரியான நிருபமா ராவ் இதற்கு முன் சீனாவுக்கான இந்திய தூதராக பதவி வகித்தவர்.
ஆக்., 5:
செல்வராசா கைது: பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவர், செல்வராசா பத்மநாபன். இவர் ஆக. 5ல் ,தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆக., 6: முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா உத்தரகண்ட் மாநில கவர்னராக பதவியேற்றார்.
* மும்பை இரட்டை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அஷ்ரத் அன்சாரி, ஹனீப் சயீது அவரது மனைவி பாமிடா ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து "பொடா' கோர்ட் தீர்ப்பளித்தது.
ஆக., 10: உத்தரகண்டில் லாக், ஜாக்லா கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 23 பேர் பலி. ஆக., 15: அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நெவார்க் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டார்.
ஆக., 19: ஜஸ்வந்த் நீக்கம்: பா.ஜ., மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் "ஜின்னா, இந்தியா, பிரிவினை- சுதந்திரம்' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார். பிரிவினைக்கு காரணமான ஜின்னாவை புகழ்ந்து இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். நேருவையும், சர்தார் பட்டேலையும் விமர்சிக்கும் வகையிலும் இந்த புத்தகத்தில் எழுதி இருந்தார். இதனால் கட்சிக்குள் பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து ஆக. 19ல், அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
ஆக., 21: முத்தூட் அதிபர் மகன் பால் ஜார்ஜ் மர்ம நபர்களால் படுகொலை.
ஆக., 23: நாட்டிலேயே முதல்முறையாக பஞ்சாப், அரியானா ஐகோர்ட் நீதிபதி கண்ணன், தனது சொத்து விபரங்களை வெளியிட்டார்.
ஆக., 24: அத்வானியின் ஆலோசகர் சுதீந்திர குல்கர்னி பா.ஜ.,வில் இருந்து விலகினார்.
* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்கள் நடத்திய "பந்த்'தில் ரயில் தண்டவாளத்தையும், மொபைல்போன் கோபுரத்தையும் வெடிவைத்து தகர்த்தனர்.
ஆக., 29: பாப் உலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்சன்: பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு. இவர் 1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தார் .1993ல் ஒரு பேட்டியில் தனது சிறு வயதில் அவர் தந்தை தன்னை தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பது, சுவரில் மோத செய்வது உள்ளிட்ட சித்ரவதைகளை தெரிவித்திருந்தார். 11 வயதிலேயே அவரது சகோதரர்களுடன் இணைந்து "தி ஜாக்சன் 5' இசை நிகழ்ச்சி நடத்தினார். "ஐ வான்ட் யூ பேக்' எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது. 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார். 1972ல் "காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் "ஆப் தி வால்' எனும் "டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் "திரில்லர்' ஆல்பம், 1987ல் "பேட்' , 1991ல் "டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் "ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன. 1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது,ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது. உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ராணுவ உடை போன்ற உடைகளையே அவர் மேடையில் விரும்பி அணிவார். 20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கிய இவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து, வீழ்ச்சி அடைந்தவராக காணப்பட்டார். 2003ம் ஆண்டில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 2005ல், அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிளாஸ்டிக் சர்ஜரி , போதை ஆகியன அவரது வீழ்ச்சிக்கு காரணங்கள் ஆகும். அமெரிக்க இசை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் ஜூன் 25ல், மாரடைப்பால் இறந்தார்.
ஆக., 31: சேவைக்கு விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த சமூக சேவகரான தீப் ஜோஷிக்கு ஆக. 31ல், வழங்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் சமூக தலைமை பிரிவில் இந்த விருதை பெற்றார். பிலிப்பைன்சில் நடைபெற்ற விழாவில், இவருடன் சீனா மற்றும் தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
உலகம்
ஆக., 5: பாகிஸ்தானின் தெற்கு வசீர்ஸ்தான் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், தலிபான் தலைவர் மெக்சூத் பைதுல்லா அவரது மனைவி, மற்றும் அவரது மாமனார் ஆகியோர் பலியாயினர்.
ஆக., 9: அமெரிக்காவில் நியூஜெர்சிக்கும், மன்ஹட்டன் பகுதிக்கும் இடைப்பட்ட ஹோபோக்கன் என்ற இடத்தில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலி.
* செல்வராசா பத்மநாதன் கைதுக்கு பின், விடுதலைப் புலிகளின் சர்வதேச "நெட்ஒர்க்' முற்றிலும் அழிந்து விட்டது என, இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபயா ராஜபக்ஷே கூறினார்.
ஆக., 10: தனது ஆட்சி காலத்தில் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது தொடர்பாக பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் மீது வழக்கு பதிவு.
ஆக., 20: ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடந்தது. 50 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது. ஆக., 23: பிரபஞ்ச பேரழகி: இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி ஆக. 23ம் தேதி பகாமாசின் நசாவ் நகரில் நடைபெற்றது. இதில் வெனிசுலா நாட்டை சேர்ந்த ஸ்டெபானியா பெர்னாண்டஸ் அழகி பட்டத்தை கைப்பற்றினார்.
விளையாட்டு
ஆக. 8: ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 8 தங்கம், 7 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் வென்று இந்திய அணி முதலிடம் பிடித்தது. ஆக. 13: ஆசியன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர் காதே 4 தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.
ஆக. 16: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆக. 17:
மின்னல் வேக வீரர்: பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் 100 மீ., தூரம் ஓட்டத்தில் பங்கேற்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், பந்தய தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் தனது முந்தைய பீஜிங் ஓலிம்பிக் சாதனையை (9.69 வினாடி) முறியடித்தார். தவிர, இதே பெர்லின் தொடரில் நடந்த 200 மீ., தூரத்தை 19.19 வினாடிகளில் கடந்து மற்றொரு உலக சாதனை (ஆக.20) படைத்து, "மின்னல் வீரர்' என்பதை மீண்டும் நிரூபித்தார்.
ஆக. 18: வங்கதேச அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. ஆக. 23: வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கைப்பற்றியது.
ஆக., 29: தடகள ராணி: சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் "வெல்ட்கிளாசி கோல்டன் தடகள லீக்' போட்டி நடந்தது. இதில் "போல்வால்ட்' பிரிவில் ரஷ்யாவின் இசின்பெயவா (27), 5.06 செ.மீ., உயரம் தாண்டி, தனது முந்தைய சாதனையை (5.05 செ.மீ) முறியடித்து, வரலாறு படைத்தார். இதற்கு முன்னதாக ஏதென்ஸ் (2004) மற்றும் பீஜிங்கில் (2008) நடந்த ஒலிம்பிக் போட்டியில் "போல்வால்ட்' பிரிவில் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக. 30: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி, 2-0 என்ற கணக்கில் வென்ற
து

செப்டம்பர்
தமிழகம்
செப்., 8: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் தனது தமிழக சுற்றுப்பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கினார்.
செப்., 10: வதந்தியால் விபரீதம்: செப்.10ல், வடகிழக்கு டில்லி கஜூரி காஸ் பகுதியிலுள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில், தரையில் இருந்த மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியர் அலறி அடித்து கொண்டு ஓடியதில், நெரிசலில் சிக்கி ஐந்து மாணவியர் பலியாயினர். இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த பெற்றோரும், உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செப்., 13: இதயேந்திரனின் இதயத்தை தானமாக பெற்ற பெங்களூருவை சேர்ந்த சிறுமி அபிராமி, மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
செப்., 15: சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக்கொண்டது சரியே என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
செப்., 17: ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை ராணுவம் சிறை பிடித்து சென்றது. செப்., 22: பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்த பிரச்னையில் கோவை பிரிக்கால் துணைத்தலைவர் ராய் ஜார்ஜ் என்பவரை தொழிலாளர்கள் தாக்கியதில் அவர் மரணமடைந்தார்.
செப்., 24: திருவண்ணாமலை பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி.
செப்., 25: சென்னையில் இரட்டைக்கொலை: சென்னை அசோக் நகர் போஸ்டல் குடியிருப்பில் விஜயா என்பவர் வசித்து வந்தார். இவரும், இவரது மகன் சூரஜ்ஜும் செப். 25ல் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.அதைத்தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அசோக் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செப்.29 : விஜயகாந்த் உண்ணாவிரதம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து டில்லியில் செப்.29ல், தே.மு.தி.க, சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
செப்., 30: திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தார் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல்.
* தமிழகத்தில் டைனோசர் சேலம் பெரியார் பல்கலை., நடத்திய ஆய்வில், அரியலூரில் டைனோசரின் முட்டைபடிவங்கள், எலும்புக்கூடுகள் செப்., 30ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தியா
செப்., 2: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சொத்து விவரங்களை கேட்கலாம் என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு.
* அதிர்ச்சி மரணம்: செப்.2ல், ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு சென்று கொண்டிருந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் ரெட்டி உட்பட அவருடன் பயணம் செய்த ஐந்து பேரும் பலியாயினர்.
* ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்துக்கு குஜராத் அரசு விதித்த தடையை அம்மாநில ஐகோர்ட் நீக்கியது.
செப்., 7: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 2011ம் ஆண்டுமுதல் பத்தாம் வகுப்பு தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.
செப்., 8: சிறையில் இருந்த சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தின்

நிசாம் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதி.

* ஜெட் ஏர்வேஸ் பைலட்கள் வேலை நிறுத்தம்.
செப்., 11: லக்னோவில் கன்ஷிராம் நினைவுச்சின்னம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
* பஞ்சாபின் அட்டாரியில் பாகிஸ்தான் வீசிய மூன்று ஏவுகணைகள் வந்து விழுந்ததால் பரபரப்பு.
செப்., 14: உ.பி.,யின் ராம்பூரில் வெள்ளப்பகுதியை பார்வையிட சென்ற போது சமாஜ்வாடி எம்.பி.,யான நடிகை ஜெயப்பிரதாவின் மாட்டுவண்டி வெள்ளத்தில் சிக்கியது. அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டனர்.செப்., 15: குஜராத் முதல்வர் மோடி அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவராக நியமனம்.
* பஞ்சாபில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பயணம் செய்த ரயில் மீது லூதியானா அருகே கல்வீசி தாக்குதல்.
செப்., 20: லோக்சபா மற்றும் சட்டசபைதேர்தல்களில் போட்டியிட்டு செலவு கணக்கு காட்டாத 3,275 பேருக்கு தேர்தலில் போட்டியிட மூன்றாண்டு தடைவிதித்து தேர்தல் கமிஷன் உத்தரவு
செப்., 23: ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஆறு குறு செயற்கைக்கோள்களுடன் ஓசியன்சாட்-2 ஏவுகணை விண்ணில் பறந்தது.
செப்., 24: சந்திரனில் தண்ணீர் இருப்பது குறித்து சந்திரயான் மூலம் தகவல் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு.
செப்., 26: ஏர் இந்தியா பைலட்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்தனர்.
* காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.
செப்., 29: ஒட்டோவோ குட்ரோச்சியை பிடிக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு.
செப்., 30: சர்வதேச அணுசக்தி கழக இயக்குனர் முகமது எல் பரேடிக்கு இந்திரா அமைதி விருது.'
உலகம்
செப்., 1: அமெரிக்காவில் வசித்து வரும் பேஷன் டிசைனர் ஆனந்த் ஜானுக்கு கற்பழிப்பு வழக்கில் 59 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
செப்., 13: அமெரிக்கா வழங்கிய நிதியுதவியை முறைகேடாக, ராணுவத்தை பலப்படுத்த செலவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் ஒப்புதல்.
செப்., 24: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அணு ஆயுத பரவலை தடை செய்ய இயற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு.
செப்., 26: ஜூரிச் படவிழாவில் கலந்துகொள்ள வந்த ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி 32 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமியை கற்பழித்த வழக்கில் கைது.
* அமெரிக்காவின் சமோவா தீவில் ஏற்பட்ட சுனாமியில் 190 பேர் பலி.
விளையாட்டு
செப்., 7: இரண்டாவது இந்தியர்: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, கத்தார் வீரர் மைக் ரசலை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்று அசத்தினார். இதன் மூலம் 139 ஆண்டு கால வரலாற்றில் இந்த தொடரில் பட்டம் வெல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன்பு இந்தியாவின் கீத் சேத்தி மட்டும் ஐந்து முறைபட்டம் வென்று இருந்தார்.
செப். 8: கார்ப்பரேட் டிராபி கிரிக்கெட் தொடரில் யுவராஜ் தலைமையிலான ஏர் இந்தியா அணி கோப்பை வென்றது. ரூ. 1 கோடி பரிசு பெற்றது
செப். 9: பெங்களூரு விமான நிலையத்தில் கேமராமேனை முகத்தில் தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், சர்ச்சைக்கு உள்ளானார்.
செப். 10: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி இரண்டாவது இடம் பெற்றது. செப். 11: இலங்கை முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, முதன் முறையாக ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்றியது. இப்பெருமை 24 மணி நேரம் மட்டுமே நீடித்தது.
செப். 12: முதல் பதக்கம்: இத்தாலியின் மிலன் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் சிங்(75 கி.கி., மிடில் வெயிட்), உஸ்பெகிஸ்தானின் அப்பாஸ் அடோவிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும் வெண்கலம் வென்று சாதித்தார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
* இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) முன்னாள் தலைவர் ராஜ்சிங் துங்கார்புர்(73) மரணம்.
செப்., 13: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் இரட்டையர் பைனலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகாஸ் லூயி ஜோடி.
செப். 14 : முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன். இதன் மூலம் இலங்கை மண்ணில் இரு அணிகளுக்கு மேல் பங்கேற்ற தொடர்களில் 11 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வென்றது.
* யு.எஸ்., ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் சாம்பியன். செப். 15: யு.எஸ்., ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்டின் சாம்பியன்.செப். 23: டென்மார்க்கில் நடந்த உலக மல்யுத்த சாம்பயின்ஷிப் தொடரில் இந்திய வீரர் ரமேஷ் குமார் வெண்கலம் வென்றார்.
செப். 29: சர்வதேச குத்துச் சண்டை ரேங்கிங் பட்டியலில் இந்தியாவின் விஜேந்தர் சிங் (75 கி.கி.,) "நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்

அக்டோபர்
தமிழகம்
அக்., 4: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறுவதாக, அதன் நிர்வாக குழு கூட்டத்தில் அறிவிப்பு.
* மதுரையில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார்.
அக்., 7: தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் திடீர் கைது.
*
ரயில் நிலையத்தில் வெடி: சோழவந்தான் ரயில் நிலையத்தில் அக். 7 அன்று பயணி ஒருவர் கொண்டு வந்த வெங்காய வெடிமூடை வெடித்து சிதறியது. இதில் இரண்டு பேர் பலியாயினர். பிளாட்பார மேற்கூரையின் சிதறல்கள் ரயில் மேல் விழுந்து தெறித்தன. இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் மேலும் ஒரு வெடிக்காத வெங்காய வெடி மூடையை கைப்பற்றினர். ரயில்நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அக்., 8: தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் தாய் மற்றும் பாட்டியால் கொல்லப்பட்டன.
அக்., 16: பள்ளிப்பட்டில் ஒரு பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 32 பேர் பலி.
அக்., 19: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா சர்வே பணியை துவங்கியது. அக்., 21: முல்லைபெரியாறில் புதிய அணைக்கட்ட ஆய்வு மேற்கொள்ள கேரளாவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.
அக்., 25: கோவை காந்திபுரத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீவிபத்து. அக்., 26: திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலில் திருடு போன மரகதலிங்கம் மீட்பு.
அக்., 29: ஐகோர்ட் மோதல் சம்பவத்துக்கு காரணமான முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.
* சீன வீரர்களுடன் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பர பரப்பு.
இந்தியா
அக்., 1: பீகாரின் அமேசி தாரேன் பையாரா கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 பேரை நக்சலைட்கள் சுட்டுக்கொன்றனர்.
அக்., 2: டில்லியில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் நடத்திய பேரணியின் போது இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது.
அக்., 3: கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் சத்ராதரை மகதோவை விடுவிக்க கோரி மாவோயிஸ்ட்கள் நடத்திய பந்த்தில் தண்டவாளங்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன.
அக்., 4: ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கன மழைக்கு 250 பேர் பலி.
அக்., 14: அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
அக்., 16: சமாஜ்வாடி பொதுச்செயலாளர் அமர்சிங் மற்றும் அவரது மனைவி மீது 500 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக உ.பி., அரசு வழக்கு பதிவு.
அக்., 18: இந்திய வான்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
அக்., 19: ஆந்திராவின் ஐதராபாத்தில் "பி.வி.என்., எக்ஸ்பிரஸ் வே' என்ற இந்தியாவின் நீளமான மேம்பாலத்தை முதல்வர் ரோசய்யா திறந்து வைத்தார்.
அக்., 21: ரயில்கள் மோதல்: கோவாவில் இருந்து டில்லி சென்ற கோவா சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயில்
அக். 21ம் தேதி அதிகாலையில் உ.பி.,யின் மதுரா அருகே சிவப்பு சிக்னலை புறக்கணித்து சென்றது. வேகமாக சென்ற ரயில் மதுரா ரயில்நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மோவார் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாயினர்.
அக்., 22: மகாராஷ்டிரா, அரியானா, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவு வெளியானது. மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
* ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக டில்லியில் தொலைதொடர்புத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை.
அக்., 23: ராஜஸ்தான் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து வசுந்தரா ராஜே ராஜினாமா.
அக்., 25: அருணாச்சல பிரதேச முதல்வராக டோர்ஜி காண்டு பதவியேற்றார். அரியானா முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா பொறுப்பேற்பு.
அக்., 27: மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களால் சிறைபிடிக்கப்பட்ட ரயிலை மூன்று மணிநேர போராட்டத்துக்கு பின் போலீசார் மீட்டனர்.
அக்., 29: அணையா நெருப்பு: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஐ.ஓ.சி., பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் அக்., 29ல், தீப்பற்றி எரிந்தது. இங்குள்ள 11 சேமிப்பு கிடங்குகளில் தீ பரவியதோடு, தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டம் படிந்து, மரங்கள் கருகி காணப்பட்டது. 10 பேரை பலிகொண்ட இந்த விபத்தால் ஐ.ஓ.சி., நிறுவனத்துக்கு மட்டும் ஏற்பட்ட நஷ்டம் 300 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்., 30: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வலியுறுத்தி பெண் அமைச்சர் சுரேகா பதவி விலகல்.
அக்., 31: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.
* புதிய தலைவர் பெங்களூருவில் உள்ள "இஸ்ரோ'வின் தலைவராக இருந்த மாதவன் நாயர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைவராக ராதாகிருஷ்ணன் அக்., 31ல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உலகம்
அக்., 1: இந்தோனேஷியாவில் மேற்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.
அக்., 7 : நோபல் சாதனையாளர்: தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். உலகின் மிக உயரிய பரிசாக நோபல் கருதப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அக். 7ல் வேதியியலுக்கான நோபல் பரிசை அறிவித்தனர். இதில் தமிழகத்தில் பிறந்த அமெரிக்க விஞ் ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவருக்கு நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன், வதோதரா நகரில் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பபையும் நிறைவு செய்தார். பின்னர் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்று, பிரிட்டனில் கேம்பிரிட்ஜில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். செல்களின் அமைப்பு மற்றும் ரிபோசோம்கள் குறித்த ஆய்வுக்காக இவருக்கு நோபல் வழங்கப்பட்டது. ரிபோசோம்களில் உள்ள கோடிக்கணக்கான அணுக்கள் குறித்த ஆராய்ச்சியை ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அணுக்களின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கி, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செயல்படும் விதம் பற்றி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் விளைவாக கேன்சருக்கும் புதிய மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. தனது அறிவியல் ஆர்வம் பற்றி குறிப்பிடும் வெங்கட்ராமன், "பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு அறிவியல் ஆர்வம் உண்டு. அதனால் இயற்பியல், வேதியியல் துறைகளில் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டேன்' என்கிறார். வெங்கட்ராமனுடன் இதே ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் தாமஸ் ஸ்டெயிட்ஸ் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அடா யோநாத் ஆகியோர் வேதியியல் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். இவர்களுக்கு டிச. 10ல் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் நோபல் வழங்கப்பட்டது. இந்திய விஞ்ஞானிகளுக்கு அரிதாகவே கிடைக்கும் நோபலை வெங்கட்ராமன் வென்றது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்தது.
அக்., 8: ஆப்கனில் இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி.
அக்., 9: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டது. அக்., 15: அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
* பாகிஸ்தானில் புலனாய்வு அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில 42 பேர் பலி.
*
புக்கர் பரிசு: சிறந்த நாவலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் புக்கர் பரிசு இந்த ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஹிலாரி மான்டெலுக்கு வழங்கப்பட்டது. இந்தியர்களுக்கு இப்பரிசு சல்மான் ருஷ்டி (1981), அருந்ததி ராய் (1997), கிரண் தேசாய் (2006) மற்றும் 2008ல் அரவிந்த் அடிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விளையாட்டு
அக். 2: வரும் 2016ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை பிரேசில் பெற்றது. ரியோ டி ஜெனிரோவில் போட்டிகள் நடக்க உள்ளன.
அக். 5: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பை வென்றது.
அக். 8 : முதல் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் துவங்கியது.
அக். 23: சாம்பியன்ஸ் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் டுபாகோ அணியை வீழ்த்தி, ஆஸ்தி ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி சாம்பியன்.
அக். 24: கனடாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை இந்திய அணி 6-0 என கைப்பற்றியது

நவம்பர்

தமிழகம்

நவ., 2: நீதிபதிகளின் சொத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் உட்பட 20 நீதிபதிகள் நவ.2ம் தேதி தங்களுடைய சொத்து விபரங்களை வெளியிட்டனர்.

நவ. 3: புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
நவ. 4: கள்ளக் காதலுக்காக பள்ளி மாணவிக்கு எய்ட்ஸ் ஊசி போட முயன்ற திருவெறும்பூர் அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ராஜகுமாரி கைது.
நவ., 8: நீலகிரி சோகம்: நீலகிரியில் நவ.8ல் இருந்து பெய்த தொடர் மழையின் காரணமாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 45க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 800க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நிலச்சரிவால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட தேயிலை மற்றும் காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நெஞ்சை உருக்கிய இந்நிலச்சரிவால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நவ. 9: தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., கட்சியின் ராஜ்யசபா எம்.பி., திருநாவுக்கரசர் காங்கிரசில் இணைந்தார்.
* சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 14 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு. நவ.14: முல்லை பெரியாறபிரச்னை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து, ம.தி.மு.க., பொதுச் செயலாளார் வைகோ தலைமையில் மதுரையில் உண்ணாவிரதம்.
நவ. 15: சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் இருந்து, 16 ஆண்டுக்கு பின் விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டது.
நவ.19: நெல்லை பல்கலையில் ஞானவாணி எப்.எம்.ரேடியோவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கினார்.
* செங்கல்பட்டு அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட ஐந்து பேர் பலியாயினர், 6 பேர் காயம். நவ. 23: வாகன விதிகளுக்கு முரணாக பஸ்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.
நவ.30: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவு.
இந்தியா
நவ. 1: உ.பி., கோண்டா அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி மீது ரயில் மோதியதில் 11 பேர் பலி
நவ. 3: சண்டிகரில் பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகளையடுத்து, மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வாகனம் திருப்பி விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதத்தால் சிறுநீரக நோயாளி வர்மா பலி.
நவ. 5: கேரளாவின் மலப்புரத்தில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் 8 மாணவர்கள் பலி.
* இமாச்சல் பிரதேசம் காங்க்ரா மாவட்டத்தில் பானர் ஆற்றில் பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 25 பேர் பலி.
நவ.6: பதவி தப்பியது: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை மாற்றக்கோரி கருணாகர ரெட்டி , ஜனார்த்தன ரெட்டி ஆகிய அமைச்சர்கள் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் போர்க்கொடி தூக்கினர். நவ.6ம் தேதி ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவாக 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனால் எடியூரப்பா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின் பா.ஜ., மேலிடம் தலையிட்டு பிரச்னையை தீர்த்தது. இது தற்காலிக தீர்வு என்பதால் எடியூரப்பாவுக்கு தலைவலி தொடரும்.
நவ. 7: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் சவான் பதவி ஏற்பு.
நவ., 9: இந்தி எதிர்ப்பு: மகாராஷ்டிர சட்டசபையில் நவ.9ல் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். இதில் இந்தி மொழியில் பதவி ஏற்றதற்காக சமாஜ்வாடி எம்.எல்.ஏ., அபு ஆசிம் மீது, நவ நிர்மாண் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 4 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நவ. 13: சபரிமலை சன்னிதானத்தின் சுற்றுக் கோயில்களான கணபதி, நாகராஜா, மாளிகைப்புறம் சன்னதிகள் தங்கத்தால் மாற்றி அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம். நவ. 19 மத்திய அரசின் புதிய கரும்பு விலைக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லியில் கரும்பு விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்பாட்டம்.
நவ. 23: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யும் முன்பே பத்திரிகையில் வெளிவந்தது தொடர்பாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
நவ.24: பாபர் மசூதி இடிப்பு தொடர் பாக 17 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த லிபரான் கமிஷன் அறிக்கை பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
நவ., 25: சாதனை ஜனாதிபதி: இந்தியாவின் அதிவேக சுகோய் போர் விமானத்தில் பறந்து, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் சாதனை படைத்தார். உலகிலேயே போர் விமானத்தில் பறந்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.
நவ.26: 2008ம் ஆண்டு இதே நாளில் நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தின் ஓராண்டு நிறைவு தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.இதில் தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரிகளுக்கும் , பொதுமக்களுக்கும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நவ.28: கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடந்ஆன்லைன் கேட் தேர்வு ரத்து.
நவ.29: ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் துவங்கினார்.
உலகம்
நவ. 2: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 34 பேர் பலி. நவ. 6: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட்ஹுட் ராணுவ மையத்தில் மேஜர் நிடாக் மாலிக் ஹசன் என்பவர் நுழைந்து 12 வீரர்களை சுட்டுக்கொன்றதால் பரபரப்பு.
நவ. 8: பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் குண்டுவெடித்து 11 பேர் பலி
நவ. 14: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு திடீர் சுற்றுப்பயணம்.
நவ.19: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கோர்ட் வளாகத்தில் தற்கொலைப்படையைச் சேர்ந்தவன் தாக்குதல் நடத்தியதில், 18 பேர் பலி, 46 பேர் படுகாயம்.
* வங்கதேச தலைவர் முஜிபுர் ரஹ்மானை கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
நவ.21: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 31 பேர் பலி.
நவ., 24: ஒபாமா விருந்து: அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், முதல்முறையாக அரசு முறை பயணமாக

அமெரிக்கா சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.24ல் வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு, அதிபர் ஒபாமா சிறப்பு விருந்து அளித்தார். இவ் விருந்தில் மன்மோகன் சிங் மனைவி, ஒபாமா மனைவி மற்றும் அமெரிக்க, இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நவ.28: ரஷ்யாவில் நெவ்ஸ்கி எக்ஸ்பிரஸ் மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள உக்லோவா கிராமத்திற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில 39 பேர் பலி.
விளையாட்டு
நவ. 3: காஷ்மீரில் விளையாட மறுத்த சர்வீசஸ் அணிக்கு ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தடை விதித்தது.
நவ. 4: மும்பையை சேர்ந்த 12 வயது மாணவர் சர்பராஸ் கான், பள்ளிகளுக்கு இடையிலான ஹாரிஸ் ஷீல்டு 3 நாள் கிரிக்கெட் போட்டியில் 439 ரன்கள் விளாசினார்.
நவ. 11: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை, 4-2 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது இந்திய அணி.
நவ. 16: "மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தமானது' என்ற சச்சின் தெரிவித்த கருத்துக்கு, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கண்டனம். நவ. 19: அயர்லாந்து அணிக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில், வெற்றியை எட்டிய பிரான்ஸ் உலககோப்பை கால்பந்து தொடருக்கு தேர்வு பெற்றது. இருப்பினும் இப்போட்டியில் பந்தை கையால் தட்டிய பிரான்ஸ் கேப்டன் தியரி ஹென்றி பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.
நவ. 21: அரசு தலையீடு காரணமாக ஈராக் கால்பந்து சங்கத்துக்கு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தடை விதித்தது.
நவ. 27 : இலங்கை அணிக்கு எதிராக கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெறும் 100 வது வெற்றியாக அமைந்தது.
நவ. 28 :
டைகர் சர்ச்சை: உலகின் "நம்பர்-1' கோல்ப் வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ், புளோரிடாவில் நடந்த கார்விபத்தில் காயம் அடைந்தார். இதனை அடுத்து பல பெண்களுடன் அவர் வைத்திருந்த தொடர்பு அம்பலமானது. இப்பிரச்னையில் அவரது மனைவி எலின் விவாகரத்து முடிவை எட்டினார். அடுக்கடுக்கான பிரச்னைகளில் சிக்கிய டைகர், போட்டிகளிலிருந்து காலவரையற்ற ஓய்வை அறிவித்தார்.
டிசம்பர்
தமிழகம்

டிச.1: டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மயில்வாகனன் நடராஜன் நியமனம்.

டிச.6: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கார் - லாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் பலி.
டிச.7: கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போன கதை இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் எண்ணமோ, அல்லது இலங்கை அரசுடன் பேசும் எண்ணமோ கிடையாது என்று மத்திய அரசு அறிவிப்பு.
டிச.9: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் கான பிரத்யேக இணையதளத்தை,
(www.ulakathamizhchemmozhi.org) முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
டிச.10: மீன் பிடித்தொழில் ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து திருச்செந்தூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
டிச.14: நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மின் வினியோக சீரமைப்பு வசதிக்காக, உற்பத்தி, பகிர்மானம் மற்றும் மின்தொடரமைப்பு வாரியங்களாக தமிழ்நாடு மின் வாரியம் மூன்றாக பிரிக்கப்பட்டது.
* பள்ளிப் படிப்பு படிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் எம்.ஏ., படித்து, பின் சட்டப்படிப்பு முடித்த 100 வக்கீல்களின் பதிவை, தமிழ்நாடு பார் கவுன்சில் ரத்து செய்தது.
டிச.15: பவானிசாகர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் ராஜா கவுந்தப்பாடியில் உள்ள அவரது வீட்டில் கைது.
டிச.20: அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரை பூங்காவை முதல்வர் கருணாநதி திறந்து வைத்தார்.
இந்தியா
டிச.7: ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெட்வதேவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அணுசக்தி ஒப்பந்தம் உட்பட மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.
டிச.9: லோக்சபாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை, காங்., எம்.பி., போனி பிரசாத் வர்மா தரக் குறைவாக விமர்சித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்தார்.
டிச.10: முகாம்களில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் வரும் ஜன.10க்குள், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்படுவர் என டில்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை அரசு உறுதி.
* தனித் தெலுங்கானா: ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கினார். இவருடன் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இக்கோரிக்கைக்கு மத்திய அரசு டிச.10 ல் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 11 நாள் உண்ணாவிரதத்தை ராவ் முடித்துக் கொண்டார். தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டிச.13: அசாம் கவுகாத்தியில் ஒருவீட்டிலிருந்த 6 பேர் நக்சலைட்டுகளால் கொலை.
டிச.14: மேற்கு வங்க மாநில கவர்னர் கோபால் கிருஷ்ண காந்தியின் பதவி காலம் முடிந்ததையடுத்து புதிய கவர்னராக பீகார் கவர்னர் தேவானந்த் கோன்வர், கூடுதல் பொறுப்பாக நியமனம்.
டிச.16: வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.
* பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவியை ஜஸ்வந்த் சிங் திடீர் ராஜினாமா.
டிச.17: தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
டிச.18: அத்வானி விலகல்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை அத்வானி டிச.18ல் ராஜினாமா செய்தார். சுஷ்மா சுவராஜ் புதிய தலைவராக பொறுப்பேற்றார். லோக்சபா, சட்டசபை தேர்தல் தோல்வி, உட்கட்சி பூசலை தொடர்ந்து கட்சியில் இளைஞர் களுக்கு வழிவிடும் வகையில் அத்வானி இம்முடிவை எடுத்தார். எனினும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோக்சபா, ராஜ்யசபா என இருசபைகளையும் உள்ளடக்கிய பார்லி., குழு தலைவராக அத்வானி தேர்வானார்.
டிச.21: காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெபூபா முப்திக்கு பாகிஸ்தான் செல்வதற்கான விசா அரசு மறுப்பு. பயங்கரவாதிகள் கைது: மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அமெரிக்காவின் டேவிட் கோல்மேன் ஹெட்லியையும், இத்திட்டத்துக்காக இந்தியாவுக்கு வந்து செல்ல, விசா ஏற்பாடு செய்த தஹவுர் ஹுசைன் ராணாவையும் அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
உலகம்
டிச.2: உல்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான அரவிந்தா ராஜ்கோவா, வங்கதேசத்தில் கைது.
டிச.4: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர் பலியாயினர்.
டிச.5: ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 112 பேர் பலி, 134க்கும் மேற்பட்டோர் காயம்.
டிச.7: பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள மூன் மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் 49 �பர் பலி.
* கோபன்ஹேகன் மாநாடு: பருவநிலை மாற்றத்தை தடுக்க, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உலக சுற்றுச்சூழல் உச்சி மாநாடு டிச.7 முதல் டிச.18 வரை நடந்தது. மாநாட்டில் எந்தவித முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை.
டிச.8: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த ஐந்து கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி.
டிச.8: பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள புலனாய்வுத்துறை அலுவலகம் அருகே தி வாயந்த குண்டு வெடித்ததில் 12 �பர் பலி. டிச.14: இத்தாலி மிலன் நகரில் நடந்த ஆளுங்கட்சி பேரணியின் போது, பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது திடீரென பாய்ந்த ஒருவர் தாக்கினார். இதில் பிரதமரின் மூக்கிலும், வாயிலும் காயம் ஏற்பட்டது. தாக்கியவர் பாதுகாவலர்களால் கைது.
டிச.15: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு விருந்தினர் மாளிகை அருகே தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில், எட்டு பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம்.
* பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் டேராகாசிகான் பகுதியில் மார்க்கெட் அருகே காரில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் பலி, 70 பேர் காயம்.
டிச.21: ஆயுதக் கடத்தலுக்கு புலிகள் பயன்படுத்திய கப்பல் கொழும்பு துறைமுகம் கொண்டு வரப்பட்டது.
விளையாட்டு
டிச. 1: ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருதை, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி பெற்றார்.
டிச. 2: இலங்கை அணிக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்டில், அதிவேகமாக 250 ரன்கள் விளாசி சாதனை படைத்தார் இந்தியாவின் சேவக்.
டிச. 6: இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
டிச. 12: இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரை 1-1 கணக்கில் சமன் செய்தது இந்தியா.
டிச. 15 : இலங்கை அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் 414 ரன்கள் குவித்து, ஒரு நாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா.
டிச., 19:
தோனிக்கு தடை: நாக்பூரில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த 2 வது போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்துவீசியது தொடர்பாக, கேப்டன் தோனிக்கு 2 ஒரு நாள் போட்டிகளில் தடை.
டிச. 20 : இந்திய கிராண்ட்பரிக்ஸ் பாட்மின்டன் தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
டிச. 21 : ஜலந்தரில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின், "பிரிஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கம் வென்றார்

No comments:

Post a Comment